2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பயிற்சிப் போட்டியில் தனுஷ்க, அஜாஸ், சமரவிக்கிரம பிரகாசிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருர் அணி, நியூசிலாந்துக்கிடையே கட்டுநாயக்காவில் இன்று ஆரம்பித்த மூன்று நாள்கள் கொண்ட பயிற்சிப் போட்டியின் இன்றைய முதல்நாளில் இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம மற்றும் நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் ஆகியோர் பிரகாசித்துள்ளனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி: 323/6 (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 98, சதீர சமரவிக்கிரம 80, அஷான் பிரியஞ்சன் ஆ.இ 56, பதும் நிஸங்க 35, அஞ்சலோ பெரேரா 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: அஜாஸ் பட்டேல் 5/41, வில்லியம் சோமர்வில்லி 1/70)

இந்நிலையில் நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கையின் ஆரம்பக் குழாமில் தனுஷ்க குணதிலக இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த 22 பேர் கொண்ட குழாம் பின்வருமாறு:-

குழாம்: திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ பெரேரா, ஒஷாட பெர்ணான்டோ, தனுஷ்க குணதிலக, ஷெகான் ஜெயசூரிய, சாமிக கருணாரத்ன, டில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, லசித் எம்புல்தெனிய, லக்‌ஷன் சந்தகான், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித, அசித பெர்ணான்டோ.

இந்த 22 பேர் கொண்ட குழாமானது அடுத்த வாரம் 15 பேர் கொண்ட குழாமாக குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X