2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பயேர்ணுக்கு செல்வதை மறுக்கும் வேர்னர்

Editorial   / 2020 மே 03 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுக்கு செல்வதை மறுத்துள்ள இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் முன்களவீரர் திமோ வேர்னர், வெளிநாட்டுக்குச் செல்லும் நகர்வொன்றையே தான் முதன்மைப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

ஆர்.பி லெய்ப்ஸிக்குடன் 2023ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள திமோ வேர்னர், 50 மில்லியன் யூரோக்கள் தொடக்கம் 60 மில்லியன் யூரோக்களுக்கிடையிலான தொகையொன்றை இப்பருவகாலத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கிலிருந்து வெளியேறுவதற்கான தொகையொன்றாகக் கொண்டிருக்கின்றார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் திமோ வேர்னரில் ஆர்வம் கொண்டிருக்கின்றபோதும் COVID-19 பரவல் ஏற்படுத்திய நிச்சயமற்றதன்மைகளால் ஆர்.பி லெய்ப்ஸிக்கிலேயே திமோ வேர்னர் தொடருவார் என அக்கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் மர்குஸ் க்றொஷே தெரிவித்துள்ளார்.

இப்பருவகாலத்தில் 27 கோல்களைப் பெற்ற திமோ வேர்னர், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகளுக்கு ஆர்.பி லெய்ப்ஸிக் முன்னேற உதவியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X