2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பயேர்ண் மியூனிச்சை வென்றது பொரூசியா டொட்டமுண்ட்

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய சுப்பர் கிண்ணப் போட்டியில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா சம்பியன்களான பயேர்ண் மியூனிச்சை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற பயேர்ண் மியூனிச் வென்றது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே தமது அணித்தலைவரும் முன்களவீரருமான மார்கோ றொய்ஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்தை பயேர்ண் மியூனிச்சின் கோல் காப்பாளரும் அணித்தலைவருமான மனுவல் நோயர் பாய்ந்து தடுக்க வேண்டிய நிலையிலிருந்து முன்னேற்றகரமாக பொரூசியா டொட்டமுண்ட் பயணித்தது.

இந்நிலையில், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் தனது பாதிக்குள் அரைவாசித் தூரம் முன்னேறிச் சென்று பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரரான பக்கோ அல்கேசரை வீழ்த்தியபோதும், சிவப்பு அட்டை காட்டப்பெறுவதிலிருந்து தப்பித்ததுடன், கோலை உட்புகவிடுவதிலிருந்தும் தப்பித்திருந்தார்.

அந்தவகையில், முதற்பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்தில் தந்திரமாக முன்னேறிவந்த தமது முன்களவீரரான ஜடோன் சஞ்சோ கொடுத்த பந்தை பக்கோ அல்கேஸர் கோலாக்க பொரூசியா டொட்டமுண்ட் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், கோலெண்ணிக்கையைச் சமப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பயேர்ண் மியூனிச்சுக்கு இருந்தபோதும் அவ்வணியின் மத்தியகளவீரரான லியோன் கொரெட்ஸ்கா, முன்களவீரர்களான கிங்ஸ்லி கோமன், தோமஸ் மல்லர், றொபேர்ட் லெவன்டோஸ்கியின் கோல் பெறும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டிருந்தன.

அந்தவகையில், பின்னர் மைதானத்தின் அரைப்பகுதியிலிருந்து சென்ற ஜடோன் சஞ்சோ போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.

ஜேர்மனிய சுப்பர் கிண்ணப் போட்டியில், புண்டெலிஸ்கா சம்பியன்களும், ஜேர்மனிய கிண்ணத் தொடரின் சம்பியன்களுமே மோதுகின்றபோதும் கடந்த பருவகாலத்தில் அது இரண்டும் பயேர்ண் மியூனிச்சாக அமைந்ததால், பயேர்ண் மியூனிச்சுடன், புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற பொரூசியா டொட்டமுண்ட் குறித்த ஜேர்மனிய சுப்பர் கிண்ணப் போட்டியில் மோதியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .