2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாகிஸ்தானை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஹமில்டனில் இன்று இடம்பெற்ற நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் நியூசிலாந்து வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான், 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மொஹமட் ஹபீஸ் 81 (80), பக்கர் ஸமன் 54 (75), சப்ராஸ் அஹமட் 51 (46), ஹரீஸ் சொஹைல் 50 (74) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் செளதி 3, கேன் வில்லியம்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 263 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து,  45.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், கொலின் டி கிரான்ட்ஹொம் ஆட்டமிழக்காமல் 74 (40), கொலின் மன்றோ 56 (42), ஹென்றி நிக்கொல்ஸ் ஆட்டமிழக்காமல் 52 (70) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷடாப் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனகாக, கொலின் டி கிரான்ட்ஹொம் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X