2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா: இரண்டாவது டெஸ்ட் நாளை

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி நாளை முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், முதலாவது டெஸ்டில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்ட அவுஸ்திரேலியா நம்பிக்கையுடன் களமிறங்குகையில், மயிரிழையில் முதலாவது டெஸ்டில் விட்ட வெற்றியை இப்போட்டியில் பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டுமென்ற முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

அபுதாபி ஆடுகளம் வழமைக்கு மாறாக புற்தரையாக இன்று காணப்பட்டிருந்தபோதும் நாளை போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு முழுதும் அல்லது குறிப்பிடத்தக்களவான புற்கள் அகற்றப்படும் என நம்பப்படுகிறது. இன்று போட்டி ஆரம்பிக்கும் வரையில் வெயிலிலேயே காணப்படவுள்ள ஆடுகளம் வறண்டும் விடும்.

இந்நிலையில், ஆடுகளம் இவ்வாறு காணப்பட்ட நிலையில், ஜோன் ஹொலன்டுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் மைக்கல் நேசருக்கு இப்போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை அவுஸ்திரேலியா வழங்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில், மர்னுஸ் லபுஷைனுக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் அஸ்தன் அகர் அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. எனினும், முதலாவது டெஸ்டில் துடுப்பாட்டத்தில் சோபித்திருக்காவிட்டாலும் பந்துவீச்சில் ஓரளவு கைகொடுத்திருந்ததால் லபுஷைன் அணியில் தொடரும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதுதவிர, லபுஷைன், ஷோண் மார்ஷ், மிற்செல் மார்ஷ் ஆகியோரின் துடுப்பாட்டம் மோசமாகக் காணப்பட்டிருந்த நிலையில், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடும் பட்சத்தில் மிற்செல் மார்ஷுக்குப் பதிலாக மத்தியவரிசையில் மற் றென்ஷோ களமிறங்கும் நிலையும் காணப்படுகிறது.

மறுபக்கமாக, காயம் காரணமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இமாம்-உல்-ஹக்கை பாகிஸ்தான் இழந்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக அஸார் அலி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்குவார் என்பதோடு, அணியில் அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஷடாப் கான் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, இமாம் உல் ஹக்கை குழாமிலுள்ள இறுதியாக ஓராண்டுக்கு முன்னரே முதற்தரப் போட்டியொன்றில் விளையாடியுள்ள பக்கர் ஸமனை அணியில் களமிறக்கும் தெரிவு காணப்படுகின்றபோதும் இத்தெரிவுக்கு அணி நிர்வாகம் செல்லாதென்றே கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X