2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து: ODI தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இலங்கை நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

இத்தொடருக்கு முன்பாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்தில் நியூசிலாந்தும் ஐந்தாமிடத்தில் பாகிஸ்தானும் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரின் எந்தவொரு முடிவும் இரண்டு அணிகளும் தரவரிசையில் முன்னேறும் சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.

மாறாக, இத்தொடரில் 3-0 என நியூசிலாந்தை பாகிஸ்தான் வெள்ளையடித்தால் அல்லது 2-1 என நியூசிலாந்தை பாகிஸ்தான் வென்றால் நான்காமிடத்துக்கு நியூசிலாந்து கீழிறங்கும் என்பதோடு, மறுபக்கமாக 3-0 என நியூசிலாந்தால் பாகிஸ்தான் வெள்ளையடிக்கப்பட்டால் அவ்வணி ஆறாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்தை பாகிஸ்தான் வெள்ளையடித்தபோதும் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்த வரையில், பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக பாபர் அஸாம் காணப்படுகின்ற நிலையில், அவருடன் இணைந்து ஷொய்ப் மலிக், மீண்டும் குழாமுக்குத் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் அவ்வணியின் துடுப்பாட்டத்துக்கு பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சுப் பக்கம், ஷடாப் கானோடு குழாமுக்கு மீண்டும் வந்திருக்கின்ற இமாட் வசீம் பலம் சேர்க்கின்றார்.

மறுபக்கமாக, நியூசிலாந்து அணியின் தூணாக அவ்வணியின் தலைவர் கேன் வில்லியம்சனே காணப்படுகின்றபோதும் சிரேஷ்ட வீரர் றொஸ் டெய்லரும் பலம் சேர்க்கின்றார். பந்துவீச்சுப் பக்கம், இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்காத ட்ரெண்ட் போல்ட், மற் ஹென்றி ஆகியோர் அணியில் இணைந்திருக்கின்றமை நியூசிலாந்துக்கு பலம் சேர்க்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .