2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பாதுகாக்கவே மென்டிஸ் குழாமில் சேர்க்கப்படவில்லை’

Editorial   / 2017 நவம்பர் 07 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் வைத்து மேலும் போர்மையையும் நம்பிக்கையையும் இழப்பதிலிருந்து குசல் மென்டிஸை பாதுகாப்பதற்காகவே, இந்திய சுற்றுப் பயணத்துக்கான டெஸ்ட் குழாமிலிருந்து குசல் மென்டிஸை நீக்கியதாக இலங்கையின் தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொரின் நான்கு இனிங்ஸ்களிலும் முறையே 10, 18, 1, 29 ஓட்டங்களையே குசல் மென்டிஸ் பெற்றிருந்தார். இந்தியாவுக்கெதிராக இவ்வாண்டு ஓகஸ்டில் குசல் மென்டிஸ் சதம் பெற்றிருந்தபோதும் தனது இறுதி 14 இனிங்ஸ்களில் இரண்டு தடவைகள் மாத்திரமே 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இலங்கை அணியின் எதிர்காலம் என பரவலாக கதைக்கப்பட்டிருந்த நிலையில், குழாமிலிருந்து குசல் மென்டிஸ் நீக்கப்பட்டது விமர்சனத்தைச் சந்தித்திருந்தது. இவ்வாண்டின் ஆரம்பத்திலும் கூட, பங்களாதேஷுக்கெதிராக மென்டிஸ் பெற்ற 194 ஓட்டங்கள் காரணமாக இலங்கையணி வெற்றிபெற்றிருந்தது.

இச்சந்ர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த தலைமைத் தேர்வாளர் கிறேமி லப்றோய், மேலுமிரண்டு இனிங்ஸ்களில் குசல் மென்டிஸ் விளையாடி, இரண்டு குறைவான ஓட்ட எண்ணிக்கைகள் இரண்டைப் பெற்று பின்னர் அணியிலிருந்து நீக்கப்படும் சந்தர்ப்பத்தையும் தாங்கள் விரும்பவில்லை எனக் கூறியுள்ளதுடன் இன்னனுமொரு 10 ஆண்டுகளுக்கு அவர் விளையாடுவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஜுலை மற்றும் ஓகஸ்டில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெள்ளையடிக்கப்பட்ட இலங்கை, இந்தியாவில் வரலாற்று ரீதியாக தடுமாறுவதுடன், இந்தியாவில் ஒரு டெஸ்டையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், சொந்த மண்ணில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருக்கையில், அனுபவம் வாய்ந்த இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர்களே கடும் சவாலை எதிர்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேலும் கருத்துத் தெரிவித்த லப்றோய், அணியில் இடம்பெறாமல் குசல் மென்டிஸை இந்தியாவுக்கு கூட்டிச் செல்ல விரும்பவில்லை எனக் கூறியதுடன், அவரை உள்ளூர் போட்டிகளில் விளையாடச் செய்து நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு வழி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X