2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பார்சிலோனா – அஸ்பன்யோல் போட்டி சமநிலை

Editorial   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற பார்சிலோனா, அஸ்பன்யோல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் வலென்சியாவை அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.

அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலுள்ள பார்சிலோனா, அஸ்பன்யோல் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

மழையின் நடுவே இடம்பெற்ற இப்போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய சேர்ஜியோ கர்சியோவிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 66ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோலாக்கிய ஜெரார்ட் மொரெனோ அஸ்பன்யோலுக்கு முன்னிலையை வழங்கியிருந்தார். இக்கோல் பெறப்படுவதற்கு முன்பாக பிலிப் கோச்சினியோ உதைத்த பந்த கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாற்று வீரராகக் களமிறங்கிய லியனல் மெஸ்ஸி உதைந்த பிறீ கிக்கொன்றை போட்டி முடிவடைய எட்டு நிமிடங்கள் இருக்கையில் ஜெராட் பிகே தலையால் முட்டி கோலாக்க கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தி போட்டியை சமநிலையில் முடித்து இப்பருவகால லா லிகாவில் தோல்வியைப் பெறாத நிலையை 22 போட்டிகளாக நீடித்துக் கொண்டது.

அத்லெட்டிகோ மட்ரிட், 1-0 என்ற கோல் கணக்கில் வலென்சியாவை வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஏஞ்சல் கொரேரா பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலை பின்வருமாறு

  1. பார்சிலோனா 22 போட்டிகள் 58 புள்ளிகள்
  2. அத்லெட்டிகோ மட்ரிட் 22 போட்டிகள் 49 புள்ளிகள்
  3. வலென்சியா 22 போட்டிகள் 40 புள்ளிகள்
  4. றியல் மட்ரிட் 21 போட்டிகள் 39 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X