2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பார்சிலோனாவை வீழ்த்திய பரிஸ் ஸா ஜெர்மைன்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, கிலியன் மப்பே மூன்று கோல்களையும், மொய்ஸே கீன் ஒரு கோலையும் பெற்றதோடு, பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனல் மெஸ்ஸி பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஹங்கேரியில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ஸிக்குடனான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, சாடியோ மனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .