2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘பாலியல் ரீதியாக அணி வைத்தியர் துன்புறுத்தினார்’

Editorial   / 2018 ஜனவரி 17 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க அணியின் முன்னாள் உடற்பயிற்சி விளையாட்டு வைத்தியர் லரி நாஸரால், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக, நான்கு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான சிமோன் பைல்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரேஸிலில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற றியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நட்சத்திரமொருவராக விளங்கிய சிமோன் பைல்ஸ், லரி நாஸர் தனது அன்பைக் கொள்ளையடித்து மகிழ்ந்திருக்க தான் விட மாட்டேன் என உணர்ச்சிபூர்வமான அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

சிமோன் பைல்ஸுடன் றியோ ஒலிம்பிக் போட்டிகளில், அணி நிகழ்வொன்றில் தங்கப் பதக்கம் வென்ற கபி டக்ளஸ் உள்ளடங்கலாக, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனைகள் மூவர், மருத்துவ சிகிச்சை என்ற போர்வையில் லரி நாஸர் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

சிறுவர் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்களைக் கொண்டிருந்தமை காரணமாக 60 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்நோக்குகின்ற லரி நாஸர், உடற்பயிற்சி வீரர்களைத் தாக்கியதை ஒப்புக் கொண்டிருந்தார். பெண் உடற்பயிற்சி வீராங்கனைகளைத் தாக்கியதை ஒப்புக் கொண்டிருந்த நிலையில், இதற்கான லரி நாஸருக்கான தண்டனை இம்மாதம் வழங்கப்பட்டிருந்தது.

தனது கணினியில் காணப்பட்ட சிறுவர் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் காரணமாக, 54 வயதான லரி நாஸர், கடந்தாண்டு டிசெம்பரிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிமோன் பைல்ஸின் அறிக்கைக்கு கருத்துத் தெரிவிக்க மாட்டோம் என லரி நாஸரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

1980ஆம் ஆண்டுகலிருந்து 2015ஆம் ஆண்டு ஜூலையில் ஐக்கிய அமெரிக்காவின் உடற்பயிற்சி தேசிய ஆளுகை சபை அவரை நீக்கும் வரையில் ஐக்கிய அமெரிக்காவின் உடற்பயிற்சித் திட்டங்களில் லரி நாஸர் பங்கெடுத்திருந்தார்.

லரி நாஸருக்கெதிரான 130க்கும் மேற்பட்ட பெண்கள், துன்புறுத்தலை மேற்கொண்டதாகக் கூறி சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .