2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரான்ஸின் முன்னிலையை 2ஆக குறைத்தது குரோஷியா

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் லுஸ்கினி அரங்கில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில்  பிரான்ஸின் முன்னிலையை இரண்டு கோல்களாக குரோஷியா குறைத்தது.

இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில், பிரான்ஸின் அன்டோனி கிறீஸ்மனை மார்சலோ பிரஸ்னோவிச் வீழ்த்த வழங்கப்பட்ட பிறீ கிக்கை அவர் உதைய, அது குரோஷியாவின் மரியோ மண்டூஸிக்கின் தலையில் பட்டு கோல் கம்பத்துக்குள் புகுந்த நிலையிலேயே பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 28ஆவது நிமிடத்தில் இவான் பெரிசிக் பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையை குரோஷியா சமப்படுத்தியிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில், போட்டியின் 38ஆவது நிமிடத்தில் இவான் பெரிசிக்கின் கையில் பந்து பட்டமையத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டியை அன்டோனி கிறீஸ்மன் கோலாக்க, பிரான்ஸ் மீண்டும் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 59ஆவது நிமிடத்தில் பிரான்ஸின் போல் பொக்பா பெற்ற கோலின் மூலமாக 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்திருந்தது.

இதேவேளை, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் பிரான்ஸின் கிலியான் மப்பே பெற்ற கோல் மூலமாக 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த நான்காவது நிமிடத்தில் பிரான்ஸின் கோல் காப்பாளர் ஹுயூகோ லோரிஸின் தவறைப் பயன்படுத்தி கோலைப் பெற்ற மரியோ மண்டூஸிக் பிரான்ஸின் முன்னிலையை 4-2 என்ற கோல் கணக்கில் இரண்டு கோல்களாக குறைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .