2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ்: சம்பியனானார் நடால்

Editorial   / 2018 ஜூன் 11 , மு.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் போட்டிகளின் சம்பியனாக, ஸ்பெய்னின் ரபேல் நடால் தெரிவானார். நேற்று (10) இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஒஸ்திரியாவின் டொமினித் தியமை எதிர்கொண்டு வெற்றிபெற்றே, சம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார்.

களிமண்தரைப் போட்டிகளின் இராஜா என அழைக்கப்படும் நடால், இப்போட்டியில் வெற்றிபெறுவார் என்றே ஆரம்பத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போன்றே ஆதிக்கத்தை வெளிப்படுத்திய நடால், முதலாவது செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-3 என்ற செட் கணக்கிலும் வெற்றிகொண்டார். தீர்மானமிக்க 3ஆவது செட்டிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த நடால், 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டையும் வென்று, சம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

உலகின் 7ஆம் நிலை வீரரான தியம், கிரான்ட் ஸ்லாம் தொடரொன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.

மறுபக்கமாக, உலகின் முதல் நிலை வீரரான நடால், தனது 17ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியதோடு, தனது 11ஆவது பிரெஞ்சுப் பகிரங்கப் பட்டத்தையும் கைப்பற்றினார். இதனால், அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கொண்ட ஆண் வீரர்களின் பட்டியலில், முதலாமிடத்தில் காணப்படும் ரொஜர் பெடரருக்கும் தனக்குமிடையிலான இடைவெளியை, 3 என, நடால் குறைத்துக் கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .