2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: காலிறுதியில் ஜோக்கோவிச், ஹலெப், தியெம்

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, உலகின் முதல்நிலைவீரரான நொவக் ஜோக்கோவிச், உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், உலகின் நான்காம் நிலை வீரரான டொமினிக் தியெம், உலகின் ஐந்தாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

நேற்று  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனியின் ஜன்-லென்னார்ட் ஸ்ரஃப்பை எதிர்கொண்ட சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் கயேல் மொன்பில்ஸை எதிர்கொண்ட ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஃபபியோ ஃபொக்னியை எதிர்கொண்ட ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 3-6, 6-2, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று  முடிவுக்கு வந்த தனது நான்காவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் பெனோய்ட் பைரேயை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, 6-2, 6-7 (8-10), 6-2, 6-7 (8-10), 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் கரென் கஷனோவ்விடம் 5-7, 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போத்ரோ தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் போலந்தின் லாகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்ட றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனினை எதிர்கொண்ட உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 6-3, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .