2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புண்டெலிஸ்கா பட்டத்தைக் கைப்பற்றியது பெயார்ண்

Editorial   / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக பெயார்ண் மியூனிச் அணி சம்பியனாகியது.

எப்.சி அகஸ்பேர்க் அணியின் மைதானத்தில். நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றதைத் தொடர்ந்தே இன்னும் ஐந்து போட்டிகள் மீதமிருக்கின்ற நிலையிலேயே புண்டெலிஸ்கா பட்டத்தை பெயார்ண் மியூனிச் கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியொன்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவை எதிர்வரும் புதன்கிழமை எதிர்கொள்ளவுள்ள பெயார்ண் மியூனிச், இப்போட்டியில் தமது முக்கிய வீரர்களான றொபேர்ட் லெவன்டோஸ்கி, தியாகோ அல்கான்டரா, மற் ஹம்மெல்ஸ் ஆகியோருக்கு ஓய்வளித்திருந்ததுடன், தோமஸ் முல்லர், பிராங் றிபெரி, ஸ்கெவி மார்ட்டின்ஸ் ஆகியோரை மாற்று வீரர்களாகவே பயன்படுத்தியிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 18ஆவது நிமிடத்தில் பெயார்ண் மியூனிச்சின் கோல் காப்பாளர் ஸ்வெட் உல்றிச் தடுத்த பந்தொன்று அவரது அணியின் நிக்லஸ் சுலேயில் பட்டுக் கோலாக எப்.சி அகஸ்பேர்க் முன்னிலை பெற்றது.

எனினும் போட்டியின் 32ஆவது நிமிடத்தில், பெயார்ண் மியூனிச்சில் ஜோஷூவா கிம்மிச் கொடுத்த பந்தை கொரென்டின் டொலிஸோ கோலாக்க கோல் எண்ணிக்கை சமமானது. அடுத்த ஆறாவது நிமிடத்தில், தமதணியின் ஜேம்ஸ் றொட்றிகாஸ் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற பெயார்ண் மியூனிச், போட்டியின் 62ஆவது நிமிடத்தில் ஆர்ஜன் றொபின், 87ஆவது நிமிடத்தில் சான்டோ வக்னர் பெற்ற கோல்களோடு இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று புண்டெலிஸ்கா சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .