2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் றியல் மட்ரிட்

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு றியல் மட்ரிட் முன்னேறியுள்ளது.

றியல் வல்லடொலிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு றியல் மட்ரிட் முன்னேறியுள்ளது.

தனது சக மத்தியகளவீரர் டொனி க்றூஸிடமிருந்து பெற்ற பந்தை றியல் மட்ரிட்டின் பின்களவீரர் தலையால் முட்டி போட்டியின் 78ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுடனேயே 1-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றிருந்தது.

முன்னதாக றியல் மட்ரிட்டின் இன்னொரு மத்தியகளவீரரான கஸேமீரோ, டொனி க்றூஸின் பிறீ கிக்கின் மூலம் தலையால் முட்டி கோல் பெற்றதாக நினைத்திருந்தபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு மூலம் ஓஃப் சைட் என குறித்த கோல் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் றியல் வல்லடொலிட்டின் முன்களவீரர் றியல் குவார்டியோலோ கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்திருந்தபோதும், அவர் ஓஃப் சைட்டில் இருந்தார் என அக்கோல் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற லெகனிஸுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் அத்லெட்டிகோ மட்ரிட் முடித்துக் கொண்டிருந்தது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் 46 புள்ளிகளுடன் லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது. 43 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் பார்சிலோனாவும், 38 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செவில்லாவும், 36 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் கெட்டாபேயும் காணப்படுகின்றன. அத்லெட்டிகோ மட்ரிட்டும் 36 புள்ளிகளுடன் உள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .