2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புவ்னேஷ்வர் குமார், தவான் இல்லை

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இந்தியக் குழாமிலிருந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக, வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஷ்வர் குமார், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று அறிவித்துள்ளது.

மிகுதியாகவிருக்கும் இலங்கைகெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் புவ்னேஷ்வர் குமார் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுவதுடன், டெல்லியில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பிக்கும் மூன்றாவது டெஸ்டின் தேர்வுக்கு ஷீகர் தவான் தயாராகவிருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. தங்களை விடுவிக்க அனுமதிக்குமாறு, அணி முகாமைத்துவத்தையும் தேர்வாளர்களையும் புவ்னேஷ்வர் குமாரும் ஷீகர் தவானும் வினவியதாக தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாரயிறுதியில் புவ்னேஷ்வர் குமாருக்கும் திருமணம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியின் நாயகனாக புவ்னேஷ்வர் குமார் தெரிவாகியிருந்ததுடன், ஷீகர் தவான் இரண்டாவது இனிங்ஸில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

புவ்னேஷ்வர் குமாருக்குப் பிரதியீடாக, தமிழ்நாட்டின் சகலதுறை வீரர் விஜய் ஷங்கர் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மிதவேகத்தில் பந்துவீசுகின்ற மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான விஜய் ஷங்கர், முதற்தரப் போட்டிகளில், 32 முதற்தரப் போட்டிகளில் 49.14 என்ற சராசரியில் 1,671 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2ஆவது டெஸ்டுக்கான குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), லோகேஷ் ராகுல், முரளி விஜய், செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே (உப அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா, ரித்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, உமேஷ் யாத, இஷாந்த் ஷர்மா, விஜய ஷங்கர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X