2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பெடரரும் ஸவ்ரேவ்வும் வென்றனர்

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாடக் கூடிய வகையிலுள்ள, உலகின் முன்னணி எட்டு டென்னிஸ் வீரர்களுக்கிடையே நேற்று ஆரம்பித்த உலக டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிகள் தொடரின் முதல்நாளில், உலகின் இரண்டாம் நிலை வீரரான, சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும் வெற்றி பெற்றுள்ளனர்.

19 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரொஜர் பெடரர், 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான, ஐக்கிய அமெரிக்காவின் ஜக் ஸ்டொக்கைத் தோற்கடித்தார். 36 வயதான ரொஜர் பெடரர், ஒவ்வோராண்டும் நடைபெறும் இத்தொடரில் 15ஆவது தடவையாக பங்கேற்ற நிலையில், உலகின் ஏழாம் நிலை வீரரான, சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்க முடியாமல் போனதால் இத்தொடரில் ஜக் ஸ்டொக் பங்கேற்றிருந்தார். இத்தொடரில் ஜக் ஸ்டொக் பங்குபற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், குறித்த போட்டி முடிவடைந்த பின்னர், டென்னிஸ் வீரர்களுக்கான தரப்படுத்தலில், இவ்வாண்டு முடிவிலும் முதலிடம் பெறுகின்றமைக்காக, 16 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெய்னின் ரபேல் நடாலுக்கு கிண்ணம் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, 20 வயதான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 4-6 என்ற ரீதியில் முதலாவது செட்டை, உலகின் ஐந்தாம் நிலை வீரரான, குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் இழந்தபோதும் 6-3, 6-4 என்ற ரீதியில் அடுத்த இரண்டு செட்களையும் வென்று போட்டியை வென்றார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில், அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை ரொஜர் பெடரர் எதிர்கொள்ளவுள்ளதுடன், ஜக் ஸ்டொக்கை மரின் சிலிச் எதிர்கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X