2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெடரர், ஷரபோவா வென்றனர்

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டிகளில் வென்ற ரொஜர் பெடரர், நொவக் ஜோக்கோவிச், சிமோனா ஹலெப், கர்பைன் முகுருஸா, மரியா ஷரபோவா ஆகியோர் இரண்டாவது சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றனர்.

இத்தொடரின் நடப்புச் சம்பியனும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில், ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெடென்னேயை வென்றார்.

ஆறு தடவைகள் இத்தொடரை வென்ற சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் டொனால்ட் யங்ௐஐ வென்றார்.

உலகின் நான்காம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-1, 7-6 (705), 7-5 என்ற நேர் செட்களில், இத்தாலியின் தோமஸ் பபியானோவை வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

உலகின் ஏழாம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கொபின், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-7 (3-7), 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் மத்தியாஸ் பஷிங்கரை வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

உலகின் முதல்நிலை வீராங்கனையான, றோமானியாவின் சிமோனா ஹலெப், 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் டெஸ்டனி அயவாவை வென்றார்.

உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான, ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸா, 6-4, 6-3 என்ற நேர் செட்களில், பிரான்ஸின் ஜெஸிக்கா பொன்செட்டை வென்றார்.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான, ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் தச்யானா மரியாவை வென்றார்.

உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில். பராகுவேயின் வெரோனிக்கா செபெடே றோய்க்கை வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான, பிரான்ஸின் கரோலின் கர்சியா தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் கரினா வித்தொப்டை வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .