2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெண்களின் உலக இருபதுக்கு – 20 இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆறாவது பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடர், மேற்கிந்தியத் தீவுகளின் கயானாவில், இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான குழு பி போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடரில், அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதில், போட்டியை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளுடன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை ஆகியன இத்தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றதோடு, தகுதிகாண் போட்டிகளில் முதலாமிடத்தை, இரண்டாமிடத்தை பெற்றதன் மூலம் பங்களாதேஷும் அயர்லாந்தும் இத்தொடருக்குத் தகுதிபெற்றிருந்தன.

குறித்த அணிகளில், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகியன குழு ஏயிலும் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகியன குழு பியிலும் இடம்பெற்றுள்ளன.

இரண்டு குழுக்களிலுமுள்ள அணிகள், தமக்கிடையே மோதி அதில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று பின்னர் இறுதிப் போட்டி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் நடைபெற்ற ஐந்து தொடர்களில், மூன்று தடவைகள் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் தலா ஒவ்வொரு தடவைகள் சம்பியனாகியுள்ள நிலையில் இம்முறை நான்காவது தடவையாகவும் அவுஸ்திரேலியாவே சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும் அவுஸ்திரேலியாவுக்கு, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, நடப்புச் சம்பியன்கள் இந்தியா உள்ளிட்ட அணிகள் பலத்த சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையணியைப் பொறுத்த வரையில், துடுப்பாட்டத்தில் அணித்தலைவி சாமரி அத்தப்பத்துவையும் பந்துவீச்சில் ஷஷிகலா சிரிவர்தனவையுமே பெரும்பாலும் தங்கியுள்ள நிலையில், இவர்களின் பெறுபேறுகளையே இலங்கையணியின் பெறுபேறு பிரதிபலிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .