2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெய்ன் உள்ளே; றென்ஷோ வெளியே?

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரில், பிறிஸ்பேணில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டிக்கான குழாம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

அறிவிக்கப்படவுள்ள குழாமில், டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியில் அண்மைய காலங்களில் விக்கெட் காப்பாளராகவிருந்த மத்தியூ வேட்டை, வேட்டுக்கு முன்னர் விக்கெட் காப்பாளராகவிருந்த பீற்றர் நெவில் பிரதியீடு செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போதைய தகவல்களின்படி, இறுதியாக 2010ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய 33 வயதான டிம் பெய்னே விக்கெட் காப்பாளராகத் தெரிவாகுவார் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, பலரும் எதிர்பார்த்தது போன்றே, அண்மைய காலமாக ஓட்டங்களைப் பெறத் தடுமாறி வரும் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மற் றென்ஷோவுக்குப் பதிலாக, இன்னொரு இளம் ஆரம்பத் துடுப்பாட்ட, விக்கெட் காப்பாளரான கமரோன் பன்குரோவ்ட் குழாமில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மத்திய வரிசையில், மூன்றாமிலக்க வீரராக உஸ்மான் கவாஜாவும் ஆறாமிலக்க வீரராக ஷோர்ன் மார்ஷும் குழாமுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது போட்டிக்கான எதிர்பார்க்கப்படும் அணி: டேவிட் வோணர், கமரோன் பன்குரோவ்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், ஷோர்ன் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), பற் கமின்ஸ், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட், ஜக்ஸன் பேர்ட் (12ஆவது வீரர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .