2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேர்ண்லியிடம் தோற்றது யுனைட்டெட்

Editorial   / 2020 ஜனவரி 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பேர்ண்லியுடனான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

இப்போட்டியின் 39ஆவது நிமிடத்தில், சக மத்தியகளவீரர் அஷ்லி வெஸ்ட்வூட்டிடமிருந்து வந்த பந்தை பேர்ண்லியின் பின்களவீரரான பென் மீ, தனது சக முன்களவீரரான கிறிஸ் வூட்டிடம் வழங்க, அவர் அதைக் கோலாக்க பேர்ண்லி முன்னிலை பெற்றது.

பின்னர், போட்டியின் 56ஆவது நிமிடத்தில் கிறிஸ் வூட்டிடம் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த பேர்ண்லியின் முன்களவீரர் ஜே றொட்றிகாஸ் பெற்ற கோலுடன் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இப்போட்டியில் சக பின்களவீரர் ஆரோன் வான்-பிஸாகா, மத்தியகளவீரர் நெமஞ்சா மட்டிச் வழங்கிய கோல் பெறும் வாய்ப்புகளை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான அன்டோனி மார்ஷியல் தவறவிட்டிருந்ததுடன், ஆரோன் வான்-பிஸாகா வழங்கிய இன்னொரு கோல் பெறும் வாய்ப்பை இன்னொரு முன்களவீரரான ஜுவான் மாத்தா தவறவிட்டிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, அயோஸ் பெரேஸ் இரண்டு கோல்களையும், ஹார்வி பார்ன்ஸ், றிக்கார்டோ பெரைரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் நோபிள் பெற்றார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற நோர்விச் சிற்றியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, டெலே அல்லி, சண் ஹெயுங்-மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நோர்விச் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை தீமு புக்கி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .