2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

போட்டி இங்கிலாந்துக்கு; தொடர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்று ஏற்கெனவே 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், சென். லூசியாவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்டை இங்கிலாந்து வென்றபோதும் 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து: 277/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 79, ஜொஸ் பட்லர் 67, றோறி பேர்ண்ஸ் 29, ஜோ டென்லி 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 4/48, கீமோ போல் 2/58, ஷனொன் கப்ரியல் 2/49, அல்ஸாரி ஜோசப் 2/61)

மேற்கிந்தியத் தீவுகள்: 154/10 (துடுப்பாட்டம்: ஜோன் கம்பெல் 41, ஷேன் டெளரிச் 38, கேமார் றோச் ஆ.இ 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 5/41, மொயின் அலி 4/36, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/42)

இங்கிலாந்து: 361/5 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 122, ஜோ டென்லி 69, ஜொஸ் பட்லர் 56, பென் ஸ்டோக்ஸ் 48, கீட்டன் ஜெனிங்ஸ் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 2/95, கீமோ போல் 1/11, கேமார் றோச் 1/45, அல்ஸாரி ஜோசப் 1/72)

மேற்கிந்தியத் தீவுகள்: 252/10 (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் ஆ.இ 102, அல்ஸாரி ஜோசப் 34, கேமார் றோச் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/27, மொயின் அலி 3/99, பென் ஸ்டோக்ஸ் 2/30, மார்க் வூட் 1/52)

போட்டியின் நாயகன்: மார்க் வூட்

தொடரின் நாயகன்: கேமார் றோச்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X