2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

போட்டி நிர்ணய குற்றச்சாட்டுக்குள்ளான சொய்ஸா கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான கோவையின் மூன்று சரத்துகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமது பந்துவீச்சுப் பயிற்சியாளர் நுவான் சொய்ஸாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது.

சர்வதேசப் போட்டியொன்றை நிர்ணயம் செய்ய முயன்றமை அல்லது முடிவில் அல்லது வேறெந்த விடயங்களில் தவறான முறையில் தாக்கம் செலுத்த முயன்றமை, சக தொழில்முறையானவர்களை இவ்வாறு செயற்படுமாறு வினவியமை, சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவுக்கு போட்டி நிர்ணயிப்பாளர்களாக இருக்கக் கூடியவர்களை வெளிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுகள் நுவான் சொய்ஸா மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலிருந்து, நேற்றிலிருந்து 14 நாட்களுக்குள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சொய்ஸா பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான நுவான் சொய்ஸா, ஒருபோதும் நேரடியான தேசிய அணியுடன் பணியாற்றாதபோதும் இலங்கை ஏ அணியின் பந்துவீச்சாளர் என்பதோடு, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷுக்கான இவ்வாண்டு சுற்றுப் பயணங்களில் பங்கெடுத்திருந்தார்.

2015ஆம் ஆண்டு செப்டெம்பரிலிருந்து வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவிருக்கும் நுவான் சொய்ஸா, அதற்கு முன்னர் இந்தியாவின் கோவா அணியின் பயிற்றுவிப்பாளராகவிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2007ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற சொய்ஸா, இலங்கைக்காக 30 டெஸ்ட்களிலும் 95 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.

அந்தவகையில், கடந்த ஒரு மாதத்துக்குள் மோசடிக் குற்றச்சாட்டுக்குள்ளாகும் இலங்கையின் இரண்டாவது முன்னாள் வீரர் சொய்ஸா ஆவார். சர்வதேசக் கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக இலங்கையணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய கடந்த மாத ஆரம்பத்தில் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .