2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போராடித் தோற்றார் சிந்து

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூப்பந்தாட்டப் போட்டிகளின் உலக சம்பியன்ஷிப் தொடரில், ஜப்பானின் நொஸோமி ஓகுஹராவும் இந்தியாவின் பி.வி. சிந்துவும் மோதிய போட்டி, இரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ஆனால், இரண்டு பேரும் போராடிய இப்போட்டியில், ஓகுஹரா வெற்றிபெற்று, உலக சம்பியனாகத் தெரிவானார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இந்த இறுதிப் போட்டி இடம்பெற்றது.

110 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், 21-19, 20-22, 22-20 என்ற செட் கணக்கில், ஓகுஹரா சம்பியனானார்.

இதில் 3ஆவது செட், அதிக கவனத்தை ஈர்த்த செட்டாக அமைந்தது. இரண்டு வீராங்கனைகளும், மாறி மாறி புள்ளிகளைப் பெற்றதோடு, நீண்ட நேரம் தவறு விடாமலும் விளையாடினர். ஒரு கட்டத்தில் 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஓகுஹரா முன்னிலை வகித்த போதிலும், தொடர்ந்து போரிட்ட சிந்து, 5-5 என்ற நிலையை ஏற்படுத்தினார்.

தொடர்ச்சியாக, ஒருவர் மாறி மற்றையவர் என, புள்ளிகள் பெறப்பட, 20-20 என்ற புள்ளி நிலை காணப்பட்டது. இறுதியிலேயே, 22-20 என்ற புள்ளிகள் கணக்கில், ஓகுஹரா வெற்றிபெற்று, சம்பியன் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டி, உலக சம்பியன்ஷிப் தொடரில், நீண்டநேரம் இடம்பெற்ற போட்டி என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டது.

இந்தப் போட்டியில், இந்தியாவின் சாய்னா நெவால், 3ஆவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .