2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முகாமையாளர் அன்சிலோட்டியை நீக்கிய நாப்போலி

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது முகாமையாளர் கார்லோ அன்சிலோட்டியை, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்கு முன்னேறிய மூன்று மணித்தியாலங்களுக்குள் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி, நேற்று அதிகாலை நீக்கியுள்ளது.

பெல்ஜியக் கழகமான ஜெங்குடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெல்லும் வரையில் அனைத்து வகையான போட்டிகளிலும் ஒன்பது போட்டிகளில் நாப்போலி வென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், நாப்போலியில் தனது இரண்டாவது பருவகாலத்தில் அன்சிலோட்டி இருக்கையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் ஏழாமிடத்தில் நாப்போலி காணப்படுகிறது.

அன்சிலோட்டியும், நாப்போலி வீரர்களும், நாப்போலியின் தலைவர் ஒளரெலியோ டி லெளரென்டிஸுடன் கடந்த மாதம் முரண்பட்டிருந்தனர். ஒரு வார கால பயிற்சி முகாமில் பங்கெடுக்குமாறு டி லெளரென்டிஸ் உத்தரவிட்டிருந்த நிலையில், அன்சிலோட்டியும், வீரர்களும் வீடுகளுக்குச் சென்றிருந்தனர்.

ஜெங்குடனான போட்டியில் வென்றதன் பின்னர் டி லெளரென்டிஸுடன் நேற்று பேசவுள்ளதாகவும், நாப்போலிக்கான சிறந்த முடிவை எடுக்கவுள்ளதாகவும் அன்சிலோட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த பருவகால முடிவில் இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனால் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெனாரோ கட்டுஸோ, அன்சிலோட்டியை பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .