2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மகிழ்ச்சியுடன் ரொஜர் பெடரர்

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 கிரான்ட் ஸ்லாம் தொடர்களை வென்ற 35 வயதான ரொஜர் பெடரர், அண்மையில் நிறைவடைந்த விம்பிள்டன் தொடரில் வெற்றிபெற்று, அதிக எதிர்பார்ப்புகளுடன், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் களமிறங்கியிருந்தார்.

ஆனால், இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அவர், 5 செட்கள் கொண்ட போட்டிகளில் விளையாடி, ஏராளமாகப் போராடியே வெற்றிபெற்றிருந்தார்.

ஆனால், 3ஆவது போட்டியில், ஸ்பெய்னின் லோபஸை எதிர்கொண்ட அவர், நேர் செட் கணக்கில் வெற்றிகொண்டு, முன்னேறினார்.

"5 செட்களைக் கொண்ட இரண்டு போட்டிகளின் பின்னர், சாதாரணமாக விளையாடும் உணர்வு குறித்து, மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். மாற்றமாக, 2 செட்களின் முடிவில் 2-0 எனச் சென்றமை, சிறப்பாக இருந்தது. அதன் பின்னர், வித்தியாசமாக உணர்ந்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் தொடரின் ஆரம்பத்தில், அவருக்கு முதுகு உபாதை காணப்பட்டது. அதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், முதுகு உபாதை பற்றிய பயத்திலிருந்து வெளியே வர வேண்டியிருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் 2ஆவது சுற்றில் தடுமாறியமைக்கு, தனது தயார்படுத்தலில் காணப்பட்ட தவறே காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .