2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முதல் நாளில் முன்னிலையில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாளில் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்ந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஆரம்பத்திலேயே அறிமுகத்தை மேற்கொண்டிருந்த வில் யங்கை ஷனொன் கப்ரியலிடம் பறிகொடுத்தது.

எனினும், தொடர்ந்து இணைந்ந டொம் லேதம், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனின் 154 ஓட்ட இணைப்பாட்டம் மூலம் பலமான நிலையைடைந்த நியூசிலாந்து, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில் வில்லியம்ஸன் 97, றொஸ் டெய்லர் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். லேதம் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். கப்ரியல், கேமர் றோச் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X