2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்தியூஸ் பந்துவீச வாய்ப்பில்லை

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெற்றுள்ளது இலங்கையணிக்கு ஊக்கத்தையளிக்கிறது.

எவ்வாறெனினும் கெண்டைக்கால் பின் தசை காயமொன்று காரணமாக பாகிஸ்தானுக்கெதிரான தொடர் முழுவதையும் தவறவிட்டிருந்த அஞலோ மத்தியூஸ், இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கெதிரான இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில், இலங்கை 14 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்த நிலையில், அஞ்சலோ மத்தியூஸ் ஐந்து ஓவர்கள் வீசியிருந்தார்.

இந்நிலையில், அணியில், முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸின் வகிபாகம் தொடர்பாக, இலங்கையணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்கவிடம் வினவப்பட்டபோது, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மத்தியூஸ் பந்துவீசமாட்டார் எனவும் துடுப்பாட்ட வீரரொருவராகவே இருப்பார் எனக் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட காலத்துக்கு, டெஸ்ட் போட்டியொன்றில் பந்துவீசாமை காரணமாக, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மத்தியூஸ் பந்துவீசுவார் என தான் நினைக்கவில்லையென்று கூறிய ருமேஷ் ரத்நாயக்க, மட்டுப்படுத்தபட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பந்துவீச்சாளரொருவராகவே தாங்கள் அஞ்சலோ மத்தியூஸை பெரும்பாலும் கருத்திற் கொள்வதாகவும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரம் அஞ்சலோ மத்தியூஸை பந்துவீச வைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அஞ்சலோ மத்தியூஸின் பணிச்சுமையை கண்காணித்து வரும் இலங்கையணி முகாமைத்துவம், கடந்த 12 மாதங்களில் பல காயங்களுக்குள்ளான அஞ்சலோ மத்தியூஸை பந்துவீச வைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு ஜுலை தொடக்கம் செப்டெம்பர் வரை இலங்கையில் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சில ஓவர்களை அஞ்சலோ மத்தியூஸ் வீசியிருந்தபோதும் டெஸ்ட் தொடரில் பந்துவீசியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஞ்சலோ மத்தியூஸ் பந்துவீசாத நிலையில், சகலதுறை வீரர் இடத்துக்காக தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக, றொஷேன் சில்வா கருத்திற் கொள்ளப்படுவர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .