2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மன். யுனைட்டெட், சிற்றி அணிகள் வெற்றி

Editorial   / 2017 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகள் வெற்றிபெற்றன. 

சிற்றி அணியும் ஏ.எப்.சி ஃபோர்ண்மெத் அணியும் மோதிய போட்டியின் ஆரம்பத்திலேயே, 13ஆவது நிமிடத்தில், போர்ண்மெத் அணியின் சார்லி டானியல்ஸ், கோலொன்றைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். 

ஆனால், 21ஆவது நிமிடத்தில், கேப்ரியல் ஜீஸஸ், மன்செஸ்டர் சிற்றி சார்பாகக் கோலொன்றைப் பெற்று, கோல் எண்ணிக்கையை 1-1 என மாற்றினார். அதுவே, முதற்பாதி முடிவில் காணப்பட்ட கோல் நிலைமையாகவும் மாறியது. 

இரண்டாவது பாதியின் போதும், பெரும்பாலான நேரத்தில் கோல்கள் பெறப்பட்டிருக்கவில்லை. ஆனால், போட்டி முடிவடையும் நேரத்தில், மன். சிற்றி அணியின் றஹீம் ஸ்டேர்லிங், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, அணிக்கு முன்னிலையை வழங்கினார். கோல் பெற்ற பின்னர், இரண்டாவது மஞ்சள் அட்டை காண்பிக்கப்பெற்ற ஸ்டேர்லிங், மைதானத்திலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது. ஆனால், மன்செஸ்டர் சிற்றி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 

இப்போட்டியில், அதிகளவில் மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டிருந்தன. 2 அணிகளும் தலா 5 மஞ்சள் அட்டைகளைப் பெற்றன.

மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கும் லெய்செஸ்டர் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், முதற்பாதியில் கோல் எதுவும் பெறப்பட்டிருக்கவில்லை. 

2ஆவது பாதியில், போட்டியின் 53ஆவது நிமிடத்தில் றொமேலு லூகாகுவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அவர் தவறவிட்டார். 

ஆனால், 70ஆவது நிமிடத்தில் மார்கஸ் றாஷ்ஃபோர்டும், 82ஆவது நிமிடத்தில் மரௌனே ஃபெலைனியும் கோல்களைப் பெற்று, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X