2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூல் வென்றன

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இடம்பெற்ற போட்டிகளில் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூல் ஆகியன வென்றன.

ஆர்சனலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியிலேயே மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. இப்போட்டியின் 14ஆவது நிமிடத்தில் பெஞ்சமின் மென்டியிடமிருந்து பெற்ற பந்தை ரஹீம் ஸ்டேர்லிங் கோலாக்க ஆரம்பத்தில் மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது.

இதன்பின்னர் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் பெஞ்சமின் மென்டியிடம் பெற்ற பந்தை பேர்னார்டோ சில்வா கோலாக்கியதோடு, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் ஹாம் யுனைட்டட்டை லிவர்பூல் வென்றிருந்தது. இப்போட்டியின் 19ஆவது நிமிடத்தில அன்டி றொபேர்ட்சனிடமிருந்து வந்த பந்தை மொஹமட் சாலா கோலாக்க ஆரம்பத்தில் முன்னிலை பெற்ற லிவர்பூல், முதற்பாதி முடிவில், ஜேம்ஸ் மில்னர் கொடுத்த பந்தை சாடியோ மனே கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இதன்பின்னர் இரண்டாவது பாதியில் 53ஆவது நிமிடத்தில், றொபேர்ட்டோ பெர்மினோவிடமிருந்து பெற்ற பந்தை சாடியோ மனே கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை பெற்றது. இதில், பெர்மினோவிடமிருந்து பந்தைப் பெறும்போது மனே ஓவ் சைட்டில் காணப்பட்டபோதும் அதை மத்தியஸ்தர் காண்பிக்கைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த் ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய டேனியல் ஸ்டரிட்ஜ் கோலொன்றைப் பெற இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X