2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்செஸ்டர் சிற்றியை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் முதலாவது சுற்று காலிறுதிப் போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றியை லிவர்பூல் வென்றதுடன் றோமாவை பார்சிலோனா வென்றது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் லிவர்பூலின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியின் 12ஆவது நிமிடத்திலேயே லிவர்பூல் முன்னிலை பெற்றது.

லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னர், சக வீரர் மொஹமட் சாலாவிடம் கொடுத்த அருமையான பந்துப் பந்தை, அவர் சக முன்கள வீரர் றொபேர்ட்டோ பெர்மினோவிடம் வழங்கினார். அவர் அதை கோல் கம்பத்தை நோக்கி உதைக்க, மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் அவ்வுதையை தடுத்தார். எனினும் அவர் தடுத்த மொஹமட் சாலாவிடம் வர அவர் அதைக் கோலாக்கியே லிவர்பூலுக்கு முன்னிலையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, மன்செஸ்டர் சிற்றியின் லெரோய் சனே உதைத்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது. தொடர்ந்து, மன்செஸ்டர் சிற்றியின் வின்சென்ட் கொம்பனியால் றொபேர்டோ பெர்மினோ விதி முறைகளை மீறிக் கையாளப்பட்டாரென மத்தியஸ்தர் பீலிக்ஸ் பிறைச் பிறீ கிக் வழங்கினார். அந்த பிறீ கிக்கை ஜேம்ஸ் மில்னர் சக வீரர் அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லின்னிடம் வழங்க, போட்டியின் 20ஆவது நிமிடத்தில் 20 அடி தூரத்திலிருந்து அவர் அதை கோலாக்கி லிவர்பூலின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

பின்னர், மொஹமட் சாலாவிடமிருந்து வந்த பந்தை சக வீரர் சாடியோ மனே, போட்டியின் 31ஆவது நிமிடத்தில் எழும்பி தலையால் முட்டிக் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் முன்ன்னிலை பெற்ற லிவர்பூல், அதன்பின்னர் கோலெதுவும் பெறப்படாத நிலையில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டிக்காக மைதானத்துக்கு வரும்போது மன்செஸ்டர் சிற்றியின் பஸ் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக, ஜெராட் பிகே, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய இரண்டு கோல்களும் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தன. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின் டெஸ்கோ பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .