2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மன்செஸ்டர் சிற்றியை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் சர்வதேச சம்பியன்ஷிப் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், மன்செஸ்டர் யுனைட்டட், ஜுவென்டஸ், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், பெய்பிக்கா ஆகிய அணிகள் வென்றன.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியை வென்றது. லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, சாடியோ மனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை லெரோய் சனே பெற்றிருந்தார்.

இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டன், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், 13ஆவது பெனால்டி உதை வரைக்கும் வெற்றியாளருக்கான பெனால்டி தொடர்ந்து, 9-8 என்ற ரீதியில் இறுதியில் மன்செஸ்டர் யுனைட்டட் வென்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸிஸ் சந்தேஸ் பெற்றிருந்ததோடு, ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை சுசோ பெற்றிருந்தார்.

இத்தாலிய சீரி ஏ நடப்புச் சம்பியனான ஜுவென்டஸ், 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா சம்பியன்களான பெயார்ண் மியூனிச்சை வென்றது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அன்ட்ரியா பவில்லி பெற்றிருந்தார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவை வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, பெர்ணான்டோ லொரன்டே, லூகாஸ் மோரா ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் ஷிக் பெற்றார்.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்ட், போர்த்துக்கல் கழகமான பெய்பிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை போட்டியின் வழமையான நேர முடிவில் பெற்றிருந்த நிலையில், பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் பெய்பிக்கா வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X