2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலிங்க, சாமரி, திமுத்துக்கு விருதுகள்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் இவ்வாண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வானது நேற்றிரவு நடைபெற்ற நிலையில், இலங்கையணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்க, அணித்தலைவி சாமரி அத்தப்பத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளினதும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளினதும் சிறந்த பந்துவீச்சாளராக மலிங்க தெரிவாகியிருந்தார். விருதுகள் கணிக்கப்பட்ட கடந்தாண்டு செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 44 விக்கெட்டுகளை மலிங்க கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, விருதுக்கான காலப்பகுதியின் 11 டெஸ்ட்களில் 779 ஓட்டங்களைப் பெற்ற திமுத், டெஸ்ட்களுக்கான சிறந்த துடுப்பாட்டவீரராகத் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் எட்டு டெஸ்ட்களில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டில்ருவான் பெரேரா, டெஸ்ட்களுக்கான சிறந்த பந்துவீச்சாளராகத் தெரிவாகினார்.

இதேவேளை, இக்காலப்பகுதியில் 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 438 ஓட்டங்களைப் பெற்றிருந்த தனஞ்சய டி சில்வா, டெஸ்ட்களுக்கான சிறந்த சகலதுறைவீரராகத் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், விருதுக் காலப்பகுதியில் 23 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 476 ஓட்டங்களைப் பெற்றதுடன் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையணியின் முன்னாள் தலைவர் திஸர பெரேரா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த சகலதுறைவீரராகத் தெரிவாகினார்.

இதேவேளை, இக்காலப் பகுதியில் ஐந்து இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 149 ஓட்டங்களைப் பெற்று, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளின் சிறந்த துடுப்பாட்டவீரராகவும் திஸர தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், குறித்த கால 20 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 704 ஓட்டங்களைப் பெற்ற குசல் பெரேரா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்டவீரராகப் பெயரிடப்பட்டிருந்தார்.

இதேவேளை, இக்கால இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 134 ஓட்டங்களைப் பெற்றதுடன், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இசுரு உதான, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளின் சிறந்த சகலதுறைவீரராகத் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், வளர்ந்துவரும் வீரராக பத்தும் நிஸங்கவு, சிறந்த சர்வதேச நடுவராக குமார் தர்மசேனவும் தெரிவாகிய நிலையில், இவ்வாண்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, ஆண்டின் சிறந்த வீராங்கனையாகவும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளின் சிறந்த துடுப்பாட்டவீராங்கனையாக மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சிறந்த சகலதுறை வீராங்கனையாக சாமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர், சகலதுறைவீராங்கனையாக, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன தெரிவாகினார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீசும் வீராங்கனையாக ஒஷாடி றணசிங்க தெரிவாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X