2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மார்ச் வரையில் கேன் இல்லை

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்கள வீரரான ஹரி கேன், இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கெதிரான போட்டியில் கணுக்கால் காயத்துக்குள்ளானமையைத் தொடர்ந்தே இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் 25 வயதான ஹரி கேனால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் தலைவரான ஹரி கேன், இவ்வாண்டு மார்ச் மாத ஆரம்பத்திலேயே பயிற்சிக்குத் திரும்புவாரென டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இப்பருவகாலத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக 20 கோல்களைப் பெற்று அதிக கோல்களைப் பெற்றவராக இருக்கும் ஹரி கேன், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டுக்கெதிரான சம்பியன்ஸ் லீக்கின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் இரண்டு போட்டிகளையும் தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள செல்சிக்கெதிரான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் ஹரி கேனால் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்திலிருக்கும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், அடுத்த மாதம் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள செல்சிக்கெதிரான, இவ்வாண்டு மார்ச் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ள ஆர்சனலுக்கெதிரான பிறீமியர் லீக் போட்டிகளிலும் ஹரி கேன் இல்லாமலே விளையாடவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .