2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மீண்டு வருவார் ஸ்டேர்லிங்’

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, மன்செஸ்டர் சிற்றி அணிகளின் வீரரான றஹீம் ஸ்டேர்லிங், அண்மைக்காலத்தில் தடுமாறுகின்ற போதிலும், அவற்றிலிருந்து அவர் மீண்டு வருவார் என, இங்கிலாந்து அணியின் முகாமையாளர் கரித் சௌத்கேட் தெரிவித்துள்ளார்.

22 வயதான ஸ்டேர்லிங், வெள்ளிக்கிழமை மால்ட்டா அணிக்கெதிரான போட்டியில், முதற்பாதி முடிவில், இங்கிலாந்து அணியால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் ஸ்டேர்லிங், இளைய வீரர் என்பதை ஞாபகமூட்டிய சௌத்கேட், அவர் தைரியமானவர் என்றும் குறிப்பிட்டார்.

முதற்பாதி நேரத்தில் வெளியேற்றப்பட்டமை, ஸ்டேர்லிங்குக்குக் கடினமானது எனத் தெரிவித்த அவர், எனினும் அவர், அதை தொழில்வாண்மையுடன் கையாண்டார் என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .