2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதலாமிட அணியாக நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 மே 03 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) அணிகளின் தரவரிசையில், உலக சம்பியன்கள் இங்கிலாந்தை முந்தி நியூசிலாந்து முதலாமிடம் பெற்றுள்ளது.

வருடாந்த இற்றைப்படுத்தலில் மூன்றாமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

குறித்த இற்றைப்படுத்தலில், 2017-18 முடிவுகள் அகற்றப்படுவதுடன், கடந்தாண்டு மே மாதம் வரையான போட்டிகளின் முடிவுகள் 50 சதவீதமான தாக்கத்தையே செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 2020-21 பருவகாலத்தில் தாம் விளையாடிய ஒரேயொரு ODI தொடரான பங்களாதேஷுக்கெதிரான தொடரில் 3-0 என்று வென்ற நிலையில் 121 புள்ளிகளை நியூசிலாந்து பெற்றுள்ளது.

முதல் 10 அணிகளினதும் தரவரிசை பின்வருமாறு,

  1. நியூசிலாந்து, 2. அவுஸ்திரேலியா, 3. இந்தியா, 4. இங்கிலாந்து, 5. தென்னாபிரிக்கா, 6. பாகிஸ்தான், 7. பங்களாதேஷ், 8. மேற்கிந்தியத் தீவுகள், 9. இலங்கை, 10. ஆப்கானிஸ்தான்.

இதேவேளை, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையிலும், ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை நியூசிலாந்து அடைந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷுக்கெதிரான தொடர் வெற்றிகளையடுத்தே இவ்வாறு நியூசிலாந்து முன்னேறியுள்ளது.

இதேவேளை, ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தை இலங்கை அடைந்துள்ளதுடன், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தை பங்களாதேஷ் அடைந்துள்ளது.

முதல் 10 அணிகளினதும் தரவரிசை பின்வருமாறு,

  1. இங்கிலாந்து, 2. இந்தியா, 3. நியூசிலாந்து, 4. பாகிஸ்தான், 5. அவுஸ்திரேலியா, 6. தென்னாபிரிக்கா, 7. ஆப்கானிஸ்தான், 8. இலங்கை, 9. பங்களாதேஷ், 10. மேற்கிந்தியத் தீவுகள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .