2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதலிடத்தில் ஜேர்மனி; இரண்டாமிடத்தில் பிரேஸில்

Editorial   / 2018 மார்ச் 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றபோதும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தரவரிசையில், நடப்பு சம்பியன்களான ஜேர்மனி முதலிடத்தில் தொடரவுள்ளது.

அடுத்த மாதம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ள புதிய இற்றைப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கவுள்ளதுடன், இரண்டாமிடத்தில் பிரேஸில் காணப்படவுள்ளது. இரண்டு அணிகளும் தமக்கிடையே முதலிடங்களை பரிமாறிய பின்னர் தற்போது கடந்த எட்டு மாதங்களாக மேற்குறித்தவாறு முதலாமிடத்தில் ஜேர்மனியும் இரண்டாமிடத்தில் பிரேஸிலும் காணப்படுகின்றன. இறுதியாக, இவ்விரண்டு அணிகளைத் தவிர்ந்த வேறொரு அணியாக, கடந்தாண்டு மார்ச்சில் ஆர்ஜென்டீனா முதலிடத்திலிருந்தது.

இந்நிலையில், ஐந்தாமிடத்திலிருந்த பெல்ஜியம், சவூதி அரேபியாவை வென்றமையத் தொடர்ந்து, இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை அடையவுள்ளது.

இதேவேளை, போர்த்துக்கல்லும் ஆர்ஜென்டீனாவும் ஒவ்வோர் இடங்களை இழந்து முறையே நான்காம், ஐந்தாமிடங்களைப் பெறவுள்ளன. 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் நான்கு இடங்களுக்குப் பின்னால் ஆர்ஜென்டீனா செல்லும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .