2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறினார் அன்டர்சன்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே, ஆறாமிடத்திலிருந்து மூன்றிடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை அன்டர்சன் அடைந்துள்ளார்.

குறித்த டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, இந்த டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு:

  1. பற் கமின்ஸ், 2. ஸ்டூவர்ட் ப்ரோட், 3. ஜேம்ஸ் அன்டர்சன், 4. நீல் வக்னர், 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. டிம் செளதி, 7. இரவிச்சந்திரன் அஷ்வின், 8. ஜஸ்பிரிட் பும்ரா, 9. ககிஸோ றபாடா, 10. ஜேஸன் ஹோல்டர்.

இந்நிலையில், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ றூட், மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

குறித்த டெஸ்டில் 258 ஓட்டங்களைப் பெற்ற பெற்ற றூட், ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 84 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் பாபர் அஸாம், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான டெஸ்டில் 89 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்ஸன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஜோ றூட், 4. மர்னுஸ் லபுஷைன், 5. விராட் கோலி, 6. பாபர் அஸாம், 7. செட்டேஸ்வர் புஜாரா, 8. ஹென்றி நிக்கொல்ஸ், 9. பென் ஸ்டோக்ஸ், 10. டேவிட் வோணர்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பென் ஸ்டோக்ஸ், 2. ஜேஸன் ஹோல்டர், 3. இரவீந்திர ஜடேஜா, 4. ஷகிப் அல் ஹஸன், 5. கைல் ஜேமிஸன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .