2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூன்றாவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட், நொட்டிங்ஹாமில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

முதலாவது டெஸ்டில், இந்திய அணித்தலைவர் விராத் கோலி மட்டும் தனித்துப் போராடியும் தோல்வியைத் தளுவியிருந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் மோசமான தோல்வியைத் தளுவிய நிலையில் தொடரை வெல்ல வேண்டுமாயில் நாளை ஆரம்பிக்கும் மூன்றாவது டெஸ்டிலிருந்து நான்காவது, ஐந்தாவது டெஸ்ட்களையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது.

இந்திய அணியின் மிகப்பெரிய சோதனையாக, இரண்டாவது டெஸ்டின் நான்காவது நாளில் முதுகுப் பகுதி உபாதையால் அவதிப்பட்ட விராத் கோலி குணமடைந்து விட்டாரா என்பதாகவே உள்ளது. விராத் கோலி விளையாடமல் போகும் பட்சத்தில் அஜின்கியா ரஹானே அணிக்குத் தலைமை தாங்க அவரின் இடத்தை கருண் நாயர் எடுத்துக் கொள்வார் எனத் தெரிகின்றது.

இது தவிர, முரளி விஜய்யுக்குப் பதிலாக ஷீகர் தவானும் குல்தீப் யாதவ்வுக்குப் பதிலாக ஜஸ்பிரிட் பும்ராவும் அணியில் இடம்பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதேவேளை, தொடர்ந்து ஓட்டங்களைப் பெறத் தடுமாறிவரும் அஜின்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக்குக்கான இறுதி வாய்ப்பாக குறித்த போட்டி அமையலாம். அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கான குழாமில் மாற்றங்கள் இருக்கலாம். ஆயினும் மழையுடன் கூடிய காலநிலையில் மேலதிக வேகப்பந்துவீச்சாளருக்குப் பதிலாக குல்தீப் யாதவ்வை தெரிவு செய்தமை, அணியில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துகின்றமை தொடர்பாக விமர்சனங்கள் அணித்தலைமை மீது முன்வைக்கப்படுகின்ற நிலையில் ஏற்கெனவே அணியில் இருக்கும் வீரர்களுக்கு மேலுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

மறுபக்கமாக இங்கிலாந்துக் குழாமில் பென் ஸ்டோக்ஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் யாரை அணியில் சேர்ப்பது, விடுவது என்ற சிக்கலை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. ஸ்டோக்ஸுக்குப் பதிலாக இரண்டாவது டெஸ்டில் அணியில் சேர்க்கப்பட்ட கிறிஸ் வோக்ஸ் சதம் பெற்று நாயகனாகத் தெரிவான நிலையில், நொட்டிங்ஹாம் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்ற நிலையில், அடில் ரஷீட்டை ஸ்டோக்ஸ் அணியில் பிரதியீடு செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

எதிர்பார்க்கப்படும் இந்திய் அணி: 1. ஷீகர் தவான், 2. லோகேஷ் ராகுல், 3. செட்டேஸ்வர் புஜாரா, 4. விராத் கோலி (அணித்தலைவர்), 5. அஜின்கியா ரஹானே, 6. ஹர்டிக் பாண்டியா, 7. தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), 8. இரவிச்சந்திரன் அஷ்வின், 9. மொஹமட் ஷமி, 10. இஷாந்த் ஷர்மா, 11. ஜஸ்பிரிட் பும்ரா.

எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி: 1. அலிஸ்டயர் குக், 2. கீட்டன் ஜெனிங்ஸ், 3. ஜோ றூட் (அணித்தலைவர்), 4. ஒலி போப், 5. ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), 6. ஜொஸ் பட்லர், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9. சாம் கர்ரன், 10. ஸ்டூவர்ட் ப்ரோட், 11. ஜேம்ஸ் அன்டர்சன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .