2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மென்டிஸின் சதத்துக்கு மத்தியிலும் இலங்கைக்குப் படுதோல்வி

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி படுதோல்வியடைந்துள்ளது. போட்டியின் 5ஆவது நாளான நேற்று (10), வெற்றிபெறும் வாய்ப்பும் இலங்கைக்குக் காணப்பட்டிருந்தாலும், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை தோல்வியடைந்தது.

453 என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 3 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்தது. இதன்படி, அவ்வணிக்கு 277 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

94 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த குசல் மென்டிஸ், தனது சதத்தைப் பூர்த்திசெய்தாலும், சிறிது நேரத்திலேயே அவர் ஆட்டமிழக்க, இலங்கையின் வாய்ப்புகள் இல்லாமல் போயின. தொடர்ந்து வந்த வீரர்கள், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தித் தோல்வியடைந்தனர். குறிப்பாக, மென்டிஸின் விக்கெட்டோடு, இலங்கையின் இறுதி 7 விக்கெட்டுகளும், 38 ஓட்டங்களுக்குப் பரிதாபமாக வீழ்ந்தன.

226 ஓட்டங்களால் இலங்கைக்குக் கிடைத்த தோல்வி, ஓட்டங்களின் அடிப்படையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இலங்கைக்குக் கிடைத்த மோசமான தோல்வியாகும். அத்தோடு, 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், அவ்வணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

மே.தீவுகள்: 414/8 (துடுப்பாட்டம்: ஷேன் டவ்றிச் ஆ.இ 125, ஷாய் ஹோப் 44, ஜேஸன் ஹோல்டர் 40, தேவேந்திர பிஷூ 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 4/95, சுரங்க லக்மால் 2/55)
இலங்கை: 185/10 (துடுப்பாட்டம்: டினேஷ் சந்திமால் 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிகுவல் கமின்ஸ் 3/39, கேமர் றோச் 2/34, ஷனொன் கப்ரியல் 2/48)
மே.தீவுகள்: 223/7 (துடுப்பாட்டம்: கெரான் பவல் 88 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 3/40, ரங்கன ஹேரத் 2/52)
இலங்கை: 226/10 (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 102 ஓட்டங்கள். றொஸ்டன் சேஸ் 4/15, தேவேந்திர பிஷூ 3/48, ஷனொன் கப்ரியல் 2/52)
போட்டியின் நாயகன்: ஷேன் டவ்றிச்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .