2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான தொடரை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் 66 ஓட்டங்களால் டக்-வேர்த் லூயிஸ் முறையில் வெற்றிபெற்ற நியூசிலாந்து, 3-0 என்ற ரீதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரை வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, மழை குறுக்கிட்டதன் காரணமாக  23 ஓவர்களைக் கொண்டதாக குறைக்கப்பட்ட போட்டியில், 23 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 47 (54), டொம் லேதம் 37 (42), கொலின் மன்றோ 21 (19), ஹென்றி நிக்கொல்ஸ் ஆட்டமிழக்காமல் 18 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷெல்டன் கோட்ரல் 2, அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், நிகிட்டியா மில்லர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 23 ஓவர்களில் 166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 23 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜேஸன் ஹோல்டர் 34 (21), நிகிட்டியா மில்லர் ஆட்டமிழக்காமல் 20 (41) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட், மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மற் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் டொட் அஸ்டில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக றொஸ் டெய்லர் தெரிவானதோடு, இத்தொடரின் நாயகனாக ட்ரெண்ட் போல்ட் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .