2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான தொடர்களுக்கான இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடர்களுக்கான இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாமானது, பெரும்பான்மையாக இலங்கையை 3-0 என வெள்ளையடித்த அதே குழாமாகவே காணப்படுகின்றது. மேலதிகத் துடுப்பாட்ட வீரராக இலங்கைக்கெதிரான தொடரில் குழாமில் காணப்பட்டு பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இணைந்து கொண்ட ஒலி போப் மாத்திரமே மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதேவேளை, ஜொனி பெயார்ஸோடோவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கெதிரான தொடரில் சேர்க்கப்பட்டு தொடரின் நாயகனாகத் தேர்வாகியிருந்த பென் போக்ஸ் மாத்திரமே, இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்காக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட குழாமிலிருந்து மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜேசன் றோயும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான குழாமில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், காயத்திலிருந்து வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி குழாமுக்குத் திரும்பியுள்ளதுடன், இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் லியம் டோஸன் காயமடைந்ததைத் தொடர்ந்து குழாமுக்கு அழைக்கப்பட்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் போட்டியின் நாயகனாகயிருந்த ஜோ டென்லி குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, இலங்க்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த லியம் டோஸன், சாம் கர்ரன், ஒலி ஸ்டோன் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இந்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெறவில்லை.

டெஸ்ட் குழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜிம்மி அன்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோ, ஸ்டூவர்ட் ப்ரோட், ரோறி பேர்ண்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோ டென்லி, பென் போக்ஸ், கீட்டன் ஜெனிங்ஸ், ஜேக் லீச், அடில் ரஷீட், பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

ODI குழாம்: ஒய்ன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோ, ஜொஸ் பட்லர், டொம் கர்ரன், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கெட், அடில் ரஷீட், ஜோ றூட், ஜேசன் றோய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .