2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேன்முறையீடு செய்தார் சந்திமால்

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பந்தைச் சேதப்படுத்தியதில் குற்றவாளியாக இனங்கண்டு, இலங்கை நேரப்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஶ்ரீநாத்தின் முடிவுக்கெதிராக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், தினேஷ் சந்திமாலின் குறித்த மேன்முறையீடானது, உண்மையாக என்னத்தை தனது வாயில் இட்டார் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. குறித்த சம்பவம் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், தனது நீளக்காற்சட்டை பையினுள் இருமல் வில்லை, பாதாம் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருந்துள்ள தினேஷ் சந்திமால், குறிப்பிட்டுக் காண்பிக்கப்பட்ட காணொளியில், எதை வாயில் இட்டதென்பதை ஞாபகம் வைத்திருக்கவில்லை. இருமல் வில்லையை பந்தை மினுமினுப்பாக்குவதற்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், பந்தின் தன்மையை மாற்றும் பதார்த்தத்தையே தினேஷ் சந்திமால் பந்தை மினுமினுப்பாக்குவதற்கு பயன்படுத்தினார் என்பதை சர்வதேச கிரிக்கெட் சபை அறிந்திருக்காது என்ற வகையிலேயே தினேஷ் சந்திமாலின் மேன்முறையீடு இருக்கப் போவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், குறித்த பதார்த்தம் எதுவென்பது காணொளியில் தெளிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த மேன்முறையீட்டுக்கான பதிலளிப்பு என்னவாக இருந்தாலும் மூன்றாவது டெஸ்டில் தினேஷ் சந்திமால் பங்கேற்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில், சுரங்க லக்மால் அல்லது ரங்கன ஹேரத் இலங்கையணியின் தலைவராக கடமையாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .