2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு மீண்டும் தண்டம்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தாமதமாகப் பந்துவீசியதன் காரணமாக தண்டம் பெற்றதுடன், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தாமதமாகப் பந்துவீசியதன் காரணமாக தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்டில் அணித்தலைவராகக் கடமையாற்றிய கிரேய்க் பிறத்வெய்ட்டிக்கு போட்டி ஊதியத்தின் 40 சதவீதமும் அணி வீரர்களுக்கு 20 சதவீதமும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அணித்தலைவராக கிரேய்க் பிறத்வெய்ட் இருக்கும்போது 12 மாத காலப் பகுதிக்குள் மீண்டுமொரு முறை மேற்கிந்தியத் தீவுகள் தாமதமாகப் பந்துவீசினால் கிரேய்க் பிறத்வெய்ட் ஒரு போட்டித் தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .