2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியது இந்தியா

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்பட்டிருக்காததோடு, இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றிருந்த நிலையில், ட்ரினிடாட்டில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி இந்தியா வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள்: 240/7 (35 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 72 (41), எவின் லூயிஸ் 43 (29), நிக்கலஸ் பூரான் 30 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: கலீல் அஹ்மட் 3/68 [7], மொஹமட் ஷமி 2/50 [7], யுஸ்வேந்திர சஹால் 1/32 [7], இரவீந்திர ஜடேஜா 1/26 [5])

இந்தியா: 256/4 (32.3 ஓவ./35 வெ.இ 255 ) (துடுப்பாட்டம்: விராத் கோலி ஆ.இ 114 (99), ஷ்ரேயாஸ் ஐயர் 65 (41), ஷீகர் தவான் 36 (36), கேதார் யாதவ் ஆ.இ 19 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஃபேபியன் அலன் 2/40 [6], கேமார் றோச் 1/53 [7])

போட்டியின் நாயகன்: விராத் கோலி

தொடரின் நாயகன்: விராத் கோலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .