2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், வான்கரேயில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் 5 விக்கெட்டுகளால் நியூசிலாந்து வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், எவின் லூயிஸ் 76 (100), றொவ்மன் பவல் 59 (50), ஷிம்ரோன் ஹெட்மயர் 29 (42), கிறிஸ் கெய்ல் 22 (31), கெஷ்ரிக் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 16 (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டவ் பிரேஸ்வெல் 4, டொட் அஸ்டில் 3, லொக்கி பெர்கியூஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 249 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 46 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜோர்ஜ் வேர்க்கர் 57 (66), றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 49 (76), கொலின் மன்றோ 49 (36), கேன் வில்லியம்சன் 38 (61) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அஷ்லி நேர்ஸ், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெஷ்ரிக் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக டவ் பிரேஸ்வெல் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .