2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இங்கிலாந்துக்கெதிராக இவ்வாண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட துடுப்பாட்ட வீரர் சுனில் அம்பிறிஸ் இடம்பெற்றுள்ளார்.

சிம்பாவேக்கெதிரான டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்த கைல் ஹோப்பையே அம்பிறிஸ் பிரதியூடு செய்துள்ளார். சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் குழாமிலிருந்து குறித்த ஒரு மாற்றம் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), கிறேய்க் பிறத்வெய்ட் (உப அணித்தலைவர்), சுனில் அம்பிறிஸ், தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளக்வூட், றொஸ்டன் சேஸ், மிக்கல் கமின்ஸ், ஷேன் டெளறிச், ஷனோன் கப்றியல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷை ஹோப், அல்ஸாரி ஜோசப், கெரான் பவல், றேமன் றெய்பர், கேமர் றோச்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .