2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யுனைட்டட்டை வென்று சம்பியனானது செல்சி

Editorial   / 2018 மே 20 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரில் செல்சி சம்பியனானது.

வெம்ப்ளி அரங்கில் நேற்று  இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைனட்டட்டை வென்றே செல்சி சம்பியனாகியுள்ளது.

போட்டியின் முதற்பாதியின் 22ஆவது நிமிடத்தில், செல்சியின் நட்சத்திர முன்கள வீரர் ஈடின் ஹஸார்ட் பெனால்டி மூலம் பெற்ற கோல் காரணமாக, 1-0 என்ற கோல் கணக்கில் குறித்த போட்டியில் வென்றே செல்சி சம்பியனாகியிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர் பில் ஜோன்ஸை ஈடின் ஹஸார்ட் தாண்டிச் செல்ல முற்பட்டபோது அவரால் வீழ்த்தப்பட்ட நிலையிலேயே பெனால்டி வழங்கப்பட்டிருந்ததுடன் அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்தது.

இந்நிலையில், போட்டியின் இரண்டாவது பாதியில் மன்செஸ்டர் யுனைட்டட் சிறப்பாக விளையாடியிருந்தது. அலெக்ஸிஸ் சந்தேஸ் கோலொன்றைப் பெற்றதாகக் கருதப்பட்டபோதும், காணொளி உதவி மத்தியஸ்தரின் உதவியுடன் அதை ஓவ் சைட் என மத்தியஸ்தர் மைக்கல் ஒலிவர் நிராகரித்திருந்தார். இது தவிர, செல்சியின் கோல் காப்பாளர் திபோ கோர்துவா தொடர்ச்சியான அபாரமான தடுப்புகளை மேற்கொண்டிருந்ததுடன், போல் பொக்பா அருமையான வாய்ப்பொன்றை வீணாக்கியிருந்தார்.

இத்தொடரில் செல்சி சம்பியனாகியுள்ளபோதும் கடந்த இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வராது அடுத்த சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதிபெற செல்சி தவறியுள்ளநிலையில், செல்சியின் முகாமையாளர் அன்டோனியோ கொன்டே செல்சிக்கு பொறுப்பாக இருக்கும் கடைசிப் போட்டியில் வெற்றியடைந்து வெற்றிப் பிரியாவிடையை அடைந்துள்ளார் எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X