2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட்டை வென்று முதலிடத்தில் லிவர்பூல்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக்  கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடனான போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஸ்கொட்ரான் ஷகி பெற்ற கோல்களால் வென்ற லிவர்பூல், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இப்போட்டியின் 24ஆவது நிமிடத்தில் சக வீரர் பபின்ஹோவிடமிருந்து வந்த பந்தை லிவர்பூலின் சாடியோ மனே கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது. அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் றொமேலு லுக்காக்குவின் உதையை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் தடுக்க அது மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஜெஸி லிங்கார்ட்டிடம் செல்ல அவர் அதைக் கோலாக்க கோலெண்ணிக்கையை மன்செஸ்டர் சமப்படுத்தியது.

அந்தவகையில், இவ்வாறாக முதற்பாதி முடிவிலும் ஏறத்தாழ அடுத்த 30 நிமிடங்களுக்கும் கோலெண்ணிக்கை சமமாக இருந்த நிலையில், போட்டி முடிவடைய 20 நிமிடங்களிருக்கையில் களமிறங்கிய லிவர்பூலின் ஸ்கொட்ரான் ஷகி, 73ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற லிவர்பூல், 80ஆவது நிமிடத்தில் அவர் பெற்ற இன்னொரு கோலின் மூலம் வெற்றியை உறுதிப்படுத்தி 3-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்றது.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற ஏனைய பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

பிறைட்டனின் மைதானத்தில்,

செல்சி 2-1 பிறைட்டன்

முதற்பாதி முடிவில் 2-0

பெட்ரோ 17  புளோரின் அன்டன் 66

ஈடின் ஹசார்ட் 33

 

செளதாம்டனின் மைதானத்தில்,

செளதாம்டன் 3-2 ஆர்சனல்

முதற்பாதி முடிவில் 2-1

டனி இங்ஸ் 20, 44  ஹென்றிக் மிகித்தரயான் 28, 53

சார்லி ஒஸ்டின் 85

 

அந்தவகையில், குறித்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

  1. லிவர்பூல் 45 புள்ளிகள்
  2. மன்செஸ்டர் சிற்றி 44 புள்ளிகள்
  3. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 39 புள்ளிகள்
  4. செல்சி 37 புள்ளிகள்
  5. ஆர்சனல் 34 புள்ளிகள்
  6. மன்செஸ்டர் யுனைட்டெட் 26 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .