2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகள்: பிரான்ஸ், இங்கிலாந்து வென்றன

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் உலக சம்பியன்கள் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன வென்றுள்ளதுடன், போர்த்துக்கல், சேர்பியாவுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

தமது நாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற குழு எச் போட்டியொன்றில் ஐஸ்லாந்தை பிரான்ஸ் வென்றிருந்தது.

இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில், சக முன்கள வீரர் கிலியான் மப்பேயிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய பிரான்ஸின் சாமுவேல் உம்டிட்டி, தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த போட்டியின் 68ஆவது நிமிடத்தில், சக பின்கள வீரரொருவரான பெஞ்சமின் பவார்ட்டிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய பிரான்ஸின் இன்னொரு முன்கள வீரரான ஒலிவர் ஜிரூட், தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

பின்னர், அடுத்த 10ஆவது நிமிடத்தில், சக முன்களவீரரொருவரான அன்டோனி கிறீஸ்மன் கொடுத்த பந்தைக் கோலாக்கிய கிலியான் மப்பே, பிரான்ஸின் முன்னிலையை 3-0 என்ற கோல் கணக்கில் அதிகரித்தார்.

இதைத் தொடர்ந்த ஆறாவது நிமிடத்தில், கிலியான் மப்பே கொடுத்த பந்தை அன்டோனி கிறீஸ்மன் கோலாக்கியதோடு, இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றிருந்தது.

இதேவேளை, மொன்டனீக்ரோவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியொன்றில் 5-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து சார்பாக, றொஸ் பார்க்லி இரண்டு கோல்களையும், மைக்கல் கீன், ஹரி கேன், ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். மொன்டனீக்ரோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ வெசோவிச் பெற்றிருந்தார்.

குறித்த போட்டியில், இங்கிலாந்தின் பின்களவீரரான டனி றோஸ் மீது இனவாத வசைபாடல்கள் இடம்பெற்றதாக இங்கிலாந்தின் முகாமையாளர் கரெத் செளத்கேட் தெரிவித்திருந்தநிலையில், இதற்கு பதிலளிக்குமால் போல இங்கிலாந்தின் முன்கள வீரரான ரஹீம் ஸ்டேர்லிங் கோல் பெற்றவுடன் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், இன்னொரு முன்கள வீரரான கலும் ஹட்சன் ஒடோய், தன்னை நோக்கி எறியப்பட்ட பொருளை வெளியே எறிருந்திருந்தார்.

இந்நிலையில், தமது நாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சேர்பியாவுடனான குழு பி போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போர்த்துக்கல் முடித்திருந்தது. போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனிலோ பெரைரா பெற்றதோடு, சேர்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை டுஸன் டடிச் பெற்றிருந்தார்.

இப்போட்டியில் பந்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஓடிய போர்த்துக்கல்லின் அணித்தலைவரும் நட்சத்திர முன்களவீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, வலது பின்தொடைதசைநார் காயம் என்பது போலத் தோன்றும் காயத்தால் பாதிக்கப்பட்டநிலையில், 30ஆவது நிமிடத்துடன் களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .